சென்னையில் மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டி தராததால், மனைவியின் ஆபாச படத்தை கணவனே ஷேர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி சில ஆண்டுகளில் கணவனுடன் ஏற்பட்ட தகராறால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு விஜயபாரதி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாற வீட்டில் பேசி இரண்டாவது முறையாக விஜயபாரதியை திருமணம் செய்து கொண்டுள்ளார் அந்த பெண்.
ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும், நாளாக நாளாக விஜயபாரதியின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது. அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை செய்த விஜயபாரதி சில நாட்கள் முன்பு 10 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு மனைவியை தொல்லை செய்துள்ளார். ஆனால் மனைவி மறுக்கவே ’பணம் தராவிட்டால் உனது அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வேன்” என மிரட்டியுள்ளார்.
அவரது மிரட்டலுக்கு பயப்படாத மனைவி உன்னால் ஆனதை செய்து கொள் என கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கே சென்று வாழ்ந்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாரதி தனது மனைவியின் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி இதுகுறித்து போலீஸில் புகார் அளித்ததன் பேரில் போலிஸார் விஜயபாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வரதட்சணை தராததால் தனது மனைவியின் அந்தரங்க படத்தை கணவனே இணையத்தில் ஷேர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.