Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பசியில் எஜமானை குதறிய நாய்கள்

Advertiesment
பசியில் எஜமானை குதறிய நாய்கள்
, வியாழன், 14 ஜூலை 2016 (12:51 IST)
வேலூர் மாவட்டத்தில் நாய்களுக்கு உணவு அளிக்க தாமதமானதால் பசியில் இருந்த நாய்கள் உணவளிக்க சென்ற எஜமானை கடித்து குதறின.   
 

 

 
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(56) என்பவர் சென்னையில் ரயில்வே பாதுகாப்பு ஜஜி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
 
கிருபாகரன், அவரது மாந்தோப்பில் நாய்கள் வளர்த்து வந்தார். தினமும் வேலை முடிந்து திரும்பியதும் இரவு 8 மணிக்கு மாந்தோப்பில் உள்ள நாய்களுக்கு இறைச்சி, மற்றும் உணவு வழங்குவது வழக்கம். 
 
வழக்கத்தை விட சற்று தாமதமாக இறைச்சி, உணவுடன் சென்ற கிருபாகரனை 2 நாய்களும் பாய்ந்து சென்று அவரை கடித்து குதறின. எஜமான் என்றும் பாராமல் அவரை கடித்து குதறியதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிருபாகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலிப்படை ஆக்கப்பட்டாரா ராம்குமார்? : வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்