Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தவைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட கிடைக்கும் மனித எலும்புகள்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (18:23 IST)
கும்பகோணம் பகுதியை சேர்ந்த சித்தவைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கிடைத்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற பகுதியில் அசோக் ராஜன் என்ற இளைஞர் கொலை வழக்கில் சித்த வைத்தியர் கேசவமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இளைஞரின் பிணத்தை தோண்டி எடுக்க காவல்துறை முயற்சித்த போது தோண்ட தோண்ட மனித எலும்புகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அசோக் ராஜனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீட்டின் ஒரு சில பகுதிகளில் புதைத்த நிலையில் வேறு ஏதேனும் உடல் புதைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் அவரது வீட்டில் அருகே தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தோண்ட தோண்ட மனித எலும்புகள் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கைதான சித்த வைத்தியர் கேசவ மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. அவரிடம் நடக்கும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்டிலேயே 9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பம்! கலைக்க சொல்லி போராடும் சுகாதாரத்துறை ஊழியர்கள்!

டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு..!

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்.. புதிய வருமான வரி சிலாட் அறிமுகம் ஆகிறதா?

பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. ஆந்திராவில் ஏஐ மையம் நிறுவ முயற்சி..!

மனைவியை கொலை செய்து குக்கரில் வேக வைத்த கணவன்.. ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments