மன்சூர் அலிகான் பாலியல் ரீதியில் அத்துமீறி  பேசிய வழக்குத் தொடர்பாக  நடிகை திரிஷாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
 
									
								
			        							
								
																	நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.
 
									
										
			        							
								
																	இந்த நிலையில்,   நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து   மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
									
											
									
			        							
								
																	வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்த  நிலையில், திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	மேலும்,    நேரடியாக அழைத்து விசாரிக்க  அவருக்கு 41 ஏ எனப்படும் நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி தெரிவித்துள்ளனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்த விவகாரத்தில் திரிஷாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மன்சூர் அலிகான் பாலியல் ரீதியில் அத்துமீறி  பேசிய வழக்குத் தொடர்பாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திரிஷா வீட்டிற்குச் சென்ற போலீஸார், திரிஷாவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.