Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்சல்கள் தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறார்கள்: சம்மந்தமே இல்லாமல் உலறும் ஹெச்.ராஜா

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (10:21 IST)
நக்சல்கள் தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள் என ஹெச்.ராஜா கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 
 
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை. நக்சல்கள்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். அவர்களே போராட்டம் நடைபெற்றதற்கு காரணமாகும் என கூறியுள்ளார்.
 
உரிமைக்காக போராடும் மக்களை தீய சக்திகள், ஆண்ட்டி இந்தியன், நக்சல்கள் என பெயர்சூட்டுவது ஹெச்.ராஜாவின் வாடிக்கையாகும். அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஹெச்.ராஜா நக்சல்கள் என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments