மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 28ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக செய்திகள் பரவியதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. திமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை மலை அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது.
அவரது ரத்தத்தில் தொற்று நோய் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதுபோக, நெஞ்சில் அளி, நிமோனியா போன்ற நோய்கள் அவருக்கு ஏற்பட்டிருந்தது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலை சீரானதால் பதற்றம் முடிவிற்கு வந்தது. ராகுல் காந்தி அவரை சந்தித்த போது வெளியான புகைப்படம் அவர் நன்றாக இருக்கிறார் என்கிற நம்பிக்கையை திமுக தொண்டர்களுக்கு ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது உடல்நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடித்துடிப்பில் ஏற்றம், இறக்கம் நிலவ அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனராம். அதன்பின், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அவரது மஞ்சள் காமாலையின் தாக்கம் இருப்பதாக தெரிகிறது. அதற்கான சிகிச்சைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவரது உடல் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதை சரிசெய்யும் சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அதேபோல், சிறுநீரகப் பாதையில் அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்று, கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள், வயோதிம் என அனைத்தும் சேர்ந்து கருணாநிதியை படுக்கையில் தள்ளியிருக்கிறது.
கல்லீரல் பிரச்சனைக்கு இந்தியாவிலேயே சிறந்த மருத்துவரான முகமது ரோலோ தலைமையிலான குழுவினர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, விரைவில் அவர் நலம் பெறுவார் என அவரின் குடும்பத்தினர் வட்டாரத்தில் கூறுகின்றனர்.