Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா ஒன்னுமே இல்ல.. திருட பொருள் கிடைக்காததால் திருடர்கள் செய்த காரியம்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:16 IST)
தூத்துக்குடியில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் திருட நகைகள் இல்லாததால் ஹோம் தியேட்டரை திருடி சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் வாக்களிப்பதற்காக குடும்பத்துடன் கடந்த 24ம் தேதி கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

திரும்ப வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் கலைந்து கிடந்துள்ளன. இதன்மூலம் தனது வீட்டில் திருட்டு முயற்சி நடந்ததை அறிந்த பாலமுருகன் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பாலமுருகன் தனது பணம், நகை உள்ளிட்டவற்றை வங்கி லாக்கரில் வைத்துள்ளதால் வீட்டில் திருட எதுவுமில்லாததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டரை திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments