Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

உயிர்பிரிந்தாலும் ஒன்றாய் இணைந்த நண்பர்கள்! – அரியலூரில் நெகிழ செய்த சம்பவம்!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:05 IST)
அரியலூரில் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்த இந்து – முஸ்லீம் நண்பர்கள் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் ஜூபிலி ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தவர் மகாலிங்கம். இவரும் டீக்கடைக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் இஸ்லாமியரான ஜெயிலா புதின் என்பவரும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒருவர் வீட்டு விசேசத்தில் மற்றொருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பணிகள் செய்யுமளவு நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கம், ஜெயிலா புதின் இருவருக்குமே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதலில் மகாலிங்கமும் அரை மணி நேரத்தில் ஜெயிலா புதினும் உயிரிழந்துள்ளனர். ஒன்றாக உயிரிழந்த நண்பர்களின் நட்பை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பும், வருத்தமும் கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா !