Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா உருவப்படத்தை எரிக்க முயற்சி; திருப்பூரில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:29 IST)
நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை கண்டித்து உருவ பொம்மையை இந்து இளைஞர் முன்னணி எரிக்க முயன்றதால் திருப்பூரில் பரபரப்பு எழுந்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் சமீபத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் மரணம் குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வருத்தம் தெரிவித்து நீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வரும் நிலையில் சூர்யா நீட் குறித்து பேசியதை கண்டித்து திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சூர்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் சூர்யா உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது போலீஸார் தடுத்ததாக தெரிகிறது. இதனால் போலீஸார் – போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments