Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி.....''மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!'' முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட்

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (19:05 IST)
தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி இடம்பெற வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், ம'க்களின் உணர்வுகளை மதியுங்கள்' என்று  முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மற்றும் திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்துவருவதால், இந்தி திணிப்புக்கு கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி( தயிர்), கர் நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.

இதனால் மீண்டும்  மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்ற  கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘’எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!

மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition

குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடிகை கஸ்தூரியின் பதில்

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments