Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - பருவமழை தீவிரம்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (16:32 IST)
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள தால் தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
 
தமிழகம், புதுச்சேரி கடல்பகுதியில் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ.வேகத்தில் அவ்வப்போது பலத்தகாற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஜூன் 30-ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த கடந்த 24 மணிநேரத்தில் சின்னக் கல்லார் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) பகுதிகளில் ஆறு செ.மீ., பாப நாசம் (திருநெல்வேலி), திருப்பத்தூர் (வேலூர்) ஆகிய இடங்களில் தலா ஐந்து செ.மீ., நீலகிரி மாவட்டம் ஜி.பஜார் பகுதியில் நான்கு செ.மீ., பொள் ளாச்சியில் மூன்று செ.மீ., மழை பெய்துள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பூதப்பாண்டி, மயிலாடி, குழித் துறை, தக்கலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் தலா இரண்டு செ.மீ., மழை பெய்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

தினமும் 700 கிலோமீட்டர் விமானத்தில் சென்று பணிபுரியும் இளம்பெண்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments