Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (07:57 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் பத்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் நீலகிரி கோவை தேனி தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

அடுத்த கட்டுரையில்
Show comments