சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:22 IST)
சென்னை உள்பட ஆறு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய புயல் சின்னம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் 6 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே இது நாள் வரை பெய்த மழை காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேலும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments