Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (12:52 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று காலை நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் தற்போது ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் காரைக்காலில் உள்ள சில பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே இன்று வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து  கொண்டு செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments