Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சையா? மருத்துவர்கள் விளக்கம்..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (12:42 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 
 
இதனை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள்  அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர் 
 
காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அவருக்கு அடிக்கடி கால் மரத்து போவதாகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  
 
இதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் மனோகரன் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments