Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (07:35 IST)
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.  
 
மேலும் வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அம்பேத்கர் பெயரை 1000 தடவை சொல்லணும்..! அமித்ஷாவுக்கு எதிராக திருமா எடுக்கும் நூதன போராட்டம்!

வெளிநாட்டில் சட்டவிரோதமாக சிம்களை விற்ற நபர்.. மடக்கி பிடித்த சைபர் க்ரைம் போலீசார்..!

அல்லு அர்ஜுன் வீட்டில் கல் எரிந்தவர்களுக்கு ஒரே நாளில் ஜாமீன்.. ரசிகர்கள் கொந்தளிப்பு..!

சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments