நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
வியாழன், 10 ஏப்ரல் 2025 (17:45 IST)
தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைபெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து அதே பகுதியில் நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடையும் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments