Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

Prasanth Karthick
வியாழன், 28 நவம்பர் 2024 (10:53 IST)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார்.

 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதில் கலந்துக் கொண்டு பேசினார்.

 

அப்போது அவர் “நானும் ரஜினிகாந்தும் இரண்டேகால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்கள் இரண்டு பேருக்கு தான் தெரியும். அந்த இரண்டே கால் மணி நேரமும் என்ன பேசினோம் என்பதும் எங்கள் இரண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்.
 

ALSO READ: இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!
 

புத்தகம் வெளியிடணும்.. பாட்டு வெளியிடணுமா எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு வெச்சிக்கணும் அவர்களுக்கு.. ஆனால் நான் ஒரு முறைதான் சந்தித்தேன். அதற்கே அய்யோ.. அய்யோ என கூச்சலிடுகிறார்கள். ஏனென்றால் அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டார்களும் சந்தித்ததில் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது” என்று பேசியுள்ளார்.

 

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினியுடனான சீமானின் இந்த சந்திப்பு எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments