Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Resign_AnbilMahesh.. எக்ஸ் வலைதள பக்கத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்..!

Mahendran
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (10:42 IST)
சமீபத்தில் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இதற்கு திராவிட மாடல் ஆட்சியை ஆதரிப்பவர்கள் கடும் கண்டனங்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 
 
இதுவரை பாஜகவினர்களை மட்டுமே சங்கீகள் என்று விமர்சனம் செய்து வந்த திராவிட மாடல் ஆதரவாளர்கள், தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களையும் சங்கீ என விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 
 
அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என்ற Resign_AnbilMahesh ஹேஷ்டேக்கையும் பதிவு செய்து வரும் நிலையில் அது தற்போது நம்பர் ஒன் டிரெண்டிங் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தன் மீது கடுமையான விமர்சனம் வெளிவந்ததை அடுத்து அமைச்சர் அன்பின் மகேஷ் சற்றுமுன் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நான்கு நாட்களில் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இருப்பினும் இன்னும் கோபம் குறையாத திமுக ஆதரவாளர்கள் அன்பில் மகேஷ் மீது தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் அவருக்கு எதிரான ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் அன்பில் மகேஷை தரக்குறைவாக விமர்சிப்பதா? பாஜக கேள்வி..!

ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை.. இப்போ எடுக்க போற நடவடிக்கை ஒரு பாடமா இருக்கும்! - அமைச்சர் அன்பில் மகேஸ்!

அறிவியல் சிந்தனையும், அறநெறியும்தான் மாணவர்களுக்கு அவசியம்! - ஆன்மீக நிகழ்ச்சி சர்ச்சையை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவு!

உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை! - திருச்சி மலைக்கோட்டையில் சிறப்பு ஏற்பாடு!

ஒரே ஆண்டில் 1.36 லட்சம் I.T ஊழியர்கள் பணிநீக்கம்! AI வளர்ச்சி காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments