நெருங்கும் புதிய புயல்; துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:35 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையாக கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு போகாமல் விஜயை தடுத்தது அவரா?!.. கோபத்தில் டெல்லி!....

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் இதுதான்.. தயாரா இருங்க..!

தெருவோர, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு.. பிரதமர் தொடங்கி வைத்த திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள்?

160 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தப்பித்த தினம்.. நினைவு கூறும் நெட்டிசன்கள்..!

கரூர் to சிபிஐ!.. அமைதியாக விஜய்!.. குழப்பத்தில் நிர்வாகிகள்!.. தவெகவில் நடப்பது என்ன?....

அடுத்த கட்டுரையில்
Show comments