தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் எனப் பேசிய அரியலூர் பாஜக தலைவர் ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்ககோரி டிசம்பர் 1-ம் தேதி தமிழக பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு வாட் வரியை குறைக்காவிட்டால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என பேசினார். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.
இதையடுத்து வன்முறையை தூண்டும் வகையிலும் அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக வாலாஜாநகர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டத்தில் இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை ஆஜர்படுத்தினர்.