Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (12:31 IST)
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்பட 35 நாட்களில் 5 பேர்களை கொலை செய்த மாற்றுத்திறனாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்தார் ராகுல் என்ற மாற்றுத்திறனாளி  திடீரென வழி மறைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 2000 சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்து அதன் பின் ராகுலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 35 நாட்களில் 5 கொலை செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி என்பதை பயன்படுத்தி பல ரயில்களில் அவர் பயணம் செய்த ராகுல், கடந்த 19ஆம் தேதி 60 வயது முதியவரை கொலை செய்து, அவரிடம் இருந்த பணம் பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

அதேபோல், கடந்த அக்டோபர் மாதம் புனே ரயிலில் பயணம் செய்த போது ஒரு பெண்ணை கொலை செய்து, அவரிடம் இருந்த பணம் நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி பெங்களூர் ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டியில் பயணம் செய்த ராகுல், சக பயணி ஒருவரை கொலை செய்துவிட்டு தப்பி உள்ளார். கைது நடவடிக்கைக்கு முந்தின நாள் கூட, தெலுங்கானாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவரை கொலை செய்து, அவரிடமிருந்த பணம் நகைகளை திருடி உள்ளார்.

35 நாட்களில் ஐந்து கொலைகளை ஈடுபட்ட ராகுல், இடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்