Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசபக்தர்கள் மட்டும் வரவும்; போராட்டத்திற்கு அழைக்கும் ஹெச்.ராஜா

Advertiesment
தேசபக்தர்கள் மட்டும் வரவும்; போராட்டத்திற்கு அழைக்கும் ஹெச்.ராஜா

Arun Prasath

, வியாழன், 19 டிசம்பர் 2019 (13:14 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து தேச பக்தர்களையும் அழைத்துள்ளார் பாஜகவின் ஹெச்.ராஜா

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இச்சட்டத்தை ஆதரித்தும் பாஜகவின் மாணவ சங்கத்தினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ”வருகிற 20.12..2019 அன்று மாலை 3.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பெருந்திரள் ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது. அதில் தேசபக்தர்கள் அனைவரையும் வரவேற்க ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் தேச பக்தர்களின் கோட்டை, இங்கு தேச விரோதிகளுக்கு இடமில்லை எனவும் அதில் கூறியுள்ளார். பாஜகவை விமர்சிப்பவர்களை எப்பொழுதும் Anti-Indian என குற்றம் சாட்டும் ஹெச்.ராஜா, இந்த போராட்ட்த்தில் தேச பக்தாளர்களை வரவேற்க ஆவலோடு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் 144 தடை உத்தரவு: ராமசந்திர குஹா கைது!