தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் பணியில் சேர உத்தரவு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:31 IST)
கொரோனாவை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வரும் மே மாதம் 3ம் ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், தமிழக காவல்துறையில் தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  தமிழக அரசு  கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்ற தகவல் வெளியாகிறது.

புதிதாகப் பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் என்ற உத்தரவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments