Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் திறந்துவைத்த மைதானத்தின் மேற்கூரை.. ஒருசில மாதங்களில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (17:38 IST)
தூத்துக்குடியில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மைதானத்தின் மேற்கூரை இன்று பெய்த காற்றுடன் கூடிய மழையால் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மைதானத்தின் மேற்கூரை 14.5 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் கட்டப்பட்டது என்பதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சரால் இந்த மைதானம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த சூறை காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் இந்த மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு உடனடியாக வந்து பார்வையிட்ட தூத்துக்குடி கலெக்டர் பொதுமக்கள் உள்ளே வந்துவிடாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்தார்.
 
மேலும் இது குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. மைதானத்தின் மேற்கூரை திறந்து வைக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments