Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் தொகுதியில் அலட்சியம் : விபத்தில் ஒருவர் பலி (வீடியோ)

Advertiesment
அமைச்சர் தொகுதியில் அலட்சியம் : விபத்தில் ஒருவர் பலி (வீடியோ)
, புதன், 5 செப்டம்பர் 2018 (18:15 IST)
கரூர்  பசுபதிபாளையம்  பகுதியில் அரசு பேருந்து மோதி விபத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
கரூர் பசுபதிபாளையம் பகுதியைசேர்ந்தவர் எலக்ட்ரிஷன் சுரேஷ் வயது 46. மாலை பள்ளிமுடிந்து தனது குழந்தைங்களை வீட்டில் விட்டு விட்டு கடைவீதிக்கு ரீசார்ஜ் செய்ய சென்றபோது  சோமூரில் இருந்து கரூர் பேரூந்துநிலையம் நோக்கிவந்த அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலே உரிழந்தார். 
 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் பசுபதிபாளையம் ரயில்வே கேட் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர் . ஒரு வார காலத்திற்குள் வேகத்தடை  அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.
 
மேலும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதியிலேயே, இது போன்ற போக்குவரத்து விபத்துகள் தொடர்வதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் அவர்கள் புகார் கூறினர்.
 
சாலைமறியலில் ஈடுபட்ட டீக்கடை நடத்திவரும் செல்வி   செய்தியாளர்களிடம்  கூறும்போது கரூர் பசுபதிபாளையம் ரயில்வே கேட் பகுதியில் நீண்ட நாட்களாக வேகத்தடை அமைத்து தர மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியத்ததால் இன்று அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார். வேக தடை விரைவில்  அமைத்து தர வேண்டும்  இல்லாவிட்டால் மீண்டும் சாலைமறியலில் ஈடுபடுவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோக்கன் போட்டு போஸ்டர், பேனர், கட் அவுட் வைங்க... ரஜினி போடும் கட்டுப்பாடு!