Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் உரை அம்மா கால அட்டவணை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (12:55 IST)
தமிழக சட்டப் பேரவை இன்று ஆளுநர் ரோசைய்யாவின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு பின்னர் செய்தியாளார்களை சந்தித்த சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரையை அம்மா கால அட்டவணை என விமர்சித்தார்.


 
 
ஆளுநர் உரை தமிழக அரசின் உரையாக இருந்தது. மக்கள் பிரச்சனையை தீர்க்க எந்தவித அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லாதது வேதனை அளிக்கிறது. ஆளுநர் உரையில் அம்மா உப்பு, அம்மா, சிமெண்ட் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் இருந்தது.
 
பறக்கும் ரயில் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்துவதாக கூறியிருக்கிறார்கள், அந்த திட்டத்தை நிறுத்தியதே இந்த அரசு தான். ஆளுநர் உரையில் அம்மா, அம்மா என அம்மா திட்டங்கள் தான் இருந்தது. மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை அம்மா கால அட்டவணை என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments