Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் மீட்டிங்.. முக்கிய ஆலோசனையா?

Mahendran
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:06 IST)
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென கூட்டம் நடத்த இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அவர்கள் துணைவேந்தர் கூட்டத்தை நடத்தினார் என்பதும் அதில் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி அமைச்சரின் கூட்டத்தை அடுத்து அதிரடியாக ஆளுநர் ரவி அவர்களும் துணைவேந்தர் கூட்டத்தை இன்று நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியின் தரம், சமீபத்தில் பொறியியல் கல்லூரியில் நடந்ததாக கூறப்பட்ட மோசடி உள்பட சில முக்கிய விஷயங்கள் இன்று ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments