Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூவர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை பரபரப்பு விளக்கம்

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (12:31 IST)
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2000 ஆவது ஆண்டு பிப்ரவரி 2 ல்  ஊழல் வழக்கில் சிறை சென்ற போது அதிமுகவினர் தருமபுரியில் ஓடும் பேருந்தை மறித்து தீ வைத்தனர். அப்போது பேருந்தில் பயணித்த வேளாண் பல்கலைகழக மாணவிகளான காயத்ரி, கோகிலாவாணி, ஹேமலதா ஆகிய மூவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
 
மாணவிகள் உயிரிழப்பிற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்தரன்,முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய முவரும் நேற்று விடுதலை ஆகியுள்ளனர். தமிழக ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் தமிழக அரசு பரிந்துரைத்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுனர் மாளிகை விளக்கமளித்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்யுங்கள் என தமிழக அரசிடம் கேட்டுக்கொண்ட போதிலும், தமிழக அரசு அவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் ஆளுனர் மாளிகை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments