Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவர் விடுதலை ஏன்...?

Advertiesment
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவர் விடுதலை ஏன்...?
, திங்கள், 19 நவம்பர் 2018 (13:37 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2000 ஆவது ஆண்டு பிப்ரவரி 2 ல்  ஊழல் வழக்கில் சிறை சென்ற போது தருமபுரியில் ஓடும் பேருந்தை மறித்து தீ மூட்டி எரித்தனர். அப்போது பேருந்தில் பயணித்த வேளாண் பல்கலைகழக மாணவிகளான காயத்ரி, கோகிலாவாணி, ஹேமலதா ஆகிய மூவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்நிலையில் மூன்று மாணவிகள் உயிரிழப்பிற்குக் காரணமான அதிமுக கடிசியைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்தரன்,முனியப்பன் ஆகியோர்  கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட மூவரும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நன்னடத்தை காரணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவின் பேரில் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
 
ஆளூம் கட்சியைச் சார்ந்தவர்கள்  என்பதால் அரசு இந்த முடிவு எடுத்துள்ளதா என்று அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் அதேசமயம் இவர்கள் மூவர் மீதும் தண்டனை காலத்தில் எந்த ரீமார்க் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை இல்லாததே நெடுஞ்செழியன், ரவீந்தரன்,முனியப்பன் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்றிருந்தும் கூட இன்று நன்னடத்தையின் காரணமாக இன்று  விடுதலை செய்யப்பட காரணமாகும். 
webdunia
இந்த வழக்கில் மூன்று உயிர்களை பேருந்தில் எரித்துக்கொன்றவர்களுக்கு கருணை வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இளம் மாணவிகளை பறிகொடுத்து நிராதரவாய் நிற்கின்ற மூன்று பெண்களின் குடும்பத்தும் இன்று விடுதலையான மூவரும் என்ன ஆறுதல் சொல்லப்போகிறார்கள் ...? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுத் தாய் தந்தை நெஞ்சங்களில் எழும்பும் கேள்விகளாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை