தமிழகத்தில் கொரொனா பரவலைத் தடுக்க வரும் 6 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்:
அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகப்பட்சமாக 50% பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.
ரயில்களில், தனியார் பேருந்துகளில், மெட்ரோ ரயில்களில் அரசுப் பேருந்துகளில் , தனியார் டேக்ஸி போன்றவற்றில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க வேண்டும்.
சுமார் 3000 சதுர அடிகொண்ட மற்றும் அதற்கு மேல் பரப்பு கொண்ட கடைகளும் வணிக வளாகங்களும், பல சரக்கு கடைகளுக்கு அனுமதி இல்லை.
மளிகை கடைகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் நண்பகல் 12 மணிவரை மட்டுமே அவை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.