Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?? – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (10:55 IST)
தமிழக அரசு பேருந்துகள் தனியார்மயமாக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழங்கங்கள் வழியாக உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை மாநகர பேருந்து சேவையை தனியாருக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், இதனால் டிக்கெட் கட்டணம் உயர்வதுடன், கூட்டம் அதிகமில்லா பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படும் அபாயமும் எழுவதாக கூறினார்.

அவரது குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்றும், தமிழக அரசு பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் என பலருக்கும் தமிழக அரசு இலவச பேருந்து சேவையை வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பேருந்துகளை நவீனப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தனியார்மயமாக்கல் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஞ்ஞானிகள் வரிசையில் “Breaking Bad” வால்டர் வொயிட்! – பஞ்சாப் பள்ளியில் பரபரப்பு!