Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ஜிகே வாசன், சபரீசன்: பதவிக்கான பயணமா?

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (09:13 IST)
மக்களவையின் ஆறாம் கட்ட தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் கடைசி கட்ட தேர்தல் மே 19ஆம் நடைபெற்று, மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அன்றைய தினம் மாலையே அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் இப்போதே அரசியல் தலைவர்கள் டெல்லியை வட்டமிட தொடங்கிவிட்டனர். அடுத்த ஆட்சியை யார் அமைத்தாலும் அதாவது பாஜக, காங்கிரஸ், மூன்றாம் அணி யார் அமைத்தாலும் அதில் பங்கு பெறுவது என்ற முடிவை திமுக எடுத்துள்ளதாகவும், போட்டியிடும் 20 தொகுதிகளில் 15 தொகுதிகளில் வெற்றி உறுதி என்பதால் பத்து அமைச்சர் பதவிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைக்காகத்தான் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் ஒரே ஒரு தொகுதியை அதிமுக கூட்டணியில் பெற்று ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் தமாக தலைவர் ஜிகே வாசனும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் தனது கட்சியை பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி எது? என்பதை முடிவு செய்துவிட்டு அதன்பின் தனது அடுத்த காயை அவர் நகர்த்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
திமுக கூட்டணியில் உள்ள மேலும் சில தலைவர்களும் குறிப்பாக திருமாவளவன் அமைச்சர் பதவியை பெற முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது!...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments