Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரத்தில் கோரம்; முன்பகைக்கு இரையான சிறுமி: ஆளும் கட்சியை சேர்ந்த இருவர் கைது!!

Webdunia
திங்கள், 11 மே 2020 (11:50 IST)
விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை நேற்று இருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதில் அந்த மாணவி 95% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. 
 
இந்த முன்பகை காரணமாக ஏற்கனவே அந்த மாணவியின் சித்தப்பா  வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய நிலையில் அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தற்போதைய தகவலின் படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments