’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 21 ஏப்ரல் 2025 (10:16 IST)
ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' என்ற திரைப்படத்தில் காரின் சக்கரம் கழண்டு சாலையில் ஓடுவது போல், அரசு பேருந்தின் சக்கரம் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய சம்பவம்,  கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் கடலூர் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை தனசேகரன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில், பேருந்து ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்பக்க சக்கரம் கழண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். ஆனால் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து, தரையில் தேய்ந்த படி ஓடி நின்றது.

கழன்று ஓடிய சக்கரம் சுமார் 100 அடி தூரத்தில் சாலை பள்ளத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லை என்பதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனை அடுத்து, பயணிகள் அனைவரையும் வேறு ஒரு பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments