Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு இலவச உணவு! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 16 அக்டோபர் 2024 (10:28 IST)

சென்னையில் நேற்று கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 நாட்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் அதீத மழைப்பொழிவு இருக்காது எனக் கூறப்படுகிறது.

 

பல பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் மக்கள் வெளியேறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் மக்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments