Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஆம் வகுப்பு மாணவன் கொடுத்த கொரோனா தடுப்பு நிதியுதவி: முதல்வர் பாராட்டு

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (20:26 IST)
கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் தாராளமாக அரசுக்கு நிதி வழங்கி உதவி செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 1150ஐ தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்ளது பெரும் நிகழ்ச்சி ஏற்படுத்தியது இந்த மாணவன் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். எனது பெயர் விபி.விஷாக். திருப்பூர் காந்திநகர் எவிபி பள்ளியில் 4ஆம் வகுப்பு படுக்கின்றேன். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க நான் சேமித்து வைத்திருந்த ரூ.1150 பணத்தை எனது தந்தையின் கணக்கில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன் என்று அந்த மாணவர் தனது கடிதத்தில்எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டரில் அவரது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து கூறியதாவது: கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments