Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ! நீதிமன்றம் தீர்ப்பு !

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (16:17 IST)
அதிமுக முன்னாள் எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ! நீதிமன்றம் தீர்ப்பு !

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் பிற்பகலில் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கு மேலாளருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்துள்ளது நீதிமன்றம். 
 
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன் ஆவார்.
 
இவர் தனது கல்லூரி விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்த வழக்கில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று, அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது, சிறப்பு நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கு மேலாளருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் 8.30 கோடி ப்ளேட் பிரியாணி விற்பனை! 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்! பிரியாணி இவ்வளவு விரும்பப்படுவது ஏன்?

சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை.. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த மாற்று ஏற்பாடு..!

நடு காட்டில் பிரசவம்.. ஜீப்பை வழிமறித்த காட்டு யானை.. கணவருடன் சிக்கிய கர்ப்பிணி பெண்..!

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments