Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னையில் பரபரப்பு..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (07:45 IST)
ஒரு பக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி அதிபர் வீட்டில் சோதனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சென்னை தியாகராஜ நகர் தொகுதி  அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா அவர்களின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் சென்னை வடபழனியில் உள்ள வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் இன்று காலை முதல்  சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த சோதனை இன்று இரவு வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என சோதனை செய்வது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் நம்பகத்தன்மை வாய்ந்த பட்டியல்.. முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கி..!

காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

47 ஆயிரம் பள்ளிக்கல்வித்துறை தற்கால பணியாளர்கள் நிரந்தரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

மீண்டும் 13 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.. துப்பாக்கி சூடு நடத்தியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments