திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (10:57 IST)
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சீட் கிடைக்காதவர்கள் மற்றும் அதிருப்தி அடைந்தவர்கள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஒருவர் தற்போது திமுகவில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திருமங்கலம் தொகுதியின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.
 
அப்போது முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவின் உறுப்பினர் அட்டையை ஸ்டாலின் வழங்கினார். மேலும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முத்துராமலிங்கம் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments