Publish Date: Sun, 21 Mar 2021 (09:17 IST)
Updated Date: Sun, 21 Mar 2021 (09:19 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஜெயலலிதா மறைவு குறித்து திமுக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக அதிமுக புகார் அளித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவரும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஜெயலலிதா மறைவு குறித்தும், ஆறுமுகசாமி விசாரணை குழு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் அரசியல் ஆதாயத்திற்காக அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.