Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு முழுவதும் வெறிச்சோடிய சென்னை சாலைகள்: அதிகாலையில் குவிந்த மக்கள்!

Advertiesment
இரவு முழுவதும் வெறிச்சோடிய சென்னை சாலைகள்: அதிகாலையில் குவிந்த மக்கள்!
, புதன், 21 ஏப்ரல் 2021 (07:13 IST)
இரவு முழுவதும் வெறிச்சோடிய சென்னை சாலைகள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் ஆனதை அடுத்து சென்னையின் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன 
 
சென்னையில் 200 இடங்களில் வாகன தடுப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டிருந்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று சென்னையை பொருத்தவரை வெளியே யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இன்று அதிகாலை 4 மணிக்கு பேருந்துகள் ஓடத் தொடங்கியதும் பயணிகள் தங்களுடைய ஊருக்கு செல்ல தொடங்கினர் 
 
வெளியூர் செல்லும் பேருந்துகளும் அதிகாலை இயக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது வெளிமாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் குவிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தத்தில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு சென்னையை பொருத்தவரை சுமுகமாக நடந்தது என்பதும் அதிகாலை முதல் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14.35 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!