Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பயங்கர தீவிபத்து: பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (18:57 IST)
சென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை ராயபுரத்தில் லோட்டஸ் ராமசாமி தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில் மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படும், சூட்கேஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது
 
இந்நிலையில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்படதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒருசில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாகவும், தீ விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments