Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஏடிஎம் மையத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் சாம்பல் என தகவல்..!

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (12:03 IST)
சென்னை புழலில் தனியார் ஏடிஎம் மையம் மற்றும் ஹோட்டலில் அதிகாலையில் திடீர் தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 சென்னை புழலில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ பற்றியதாகவும், இந்த தீ அருகில் இருந்த ஹோட்டலுக்கும் பரவியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த தீ விபத்தால் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரம் தீயில் கருகி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இதனை அடுத்து தனியார் வங்கி நிர்வாகிகளுக்கு இந்த தீவிபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் வந்தவுடன் தான் ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments