Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுஇடங்களில் மாடுகள் திரிந்தால் அபராதம் -சென்னை மாநகர ஆணையர்

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:26 IST)
சென்னையில் பள்ளிக் குழந்தையை  பசுமாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் மாடுகளின் உரிமையாளர் மீது ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டும் என்று  சென்னை மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசுமாடு, அந்த வழியே  சென்ற பள்ளி குழந்தையை  முட்டித் தூக்கி வீசியது.

அந்தக் பசு மாட்டிடம் இருந்து சிறுமியை  மீட்கப் பலரும் போராடிய நிலையில் அந்த மாடு ஆக்ரோசமாக ஆயிஷா என்ற  சிறுமியை முட்டியது.

அதன்பின்னர்,அந்த மாட்டை விரட்டிய சிறுமியை மீட்டனர்.  படுகாயமடைந்த  குழந்தையை தந்தை ஜாஃபர் சித்திக் மற்றும் தாய் ஹஸ்ரின் பானு  மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குழந்தைக்கு  சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தைக்கு பல் மற்றும் கண்ணில் அடிபட்டுள்ளதாகவும், தலையில் பலத்த அடிபட்டுள்ளதால், 4 தையல்கள் போட்டுள்ளதாக குழந்தை ஆயிஷாவின் தாத்தா கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக  மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாக  தகவல் வெளியாகிறது.

மேலும்,  ‘’சென்னையில், பொது இடங்களில் மாடுகள் திரிந்தால்  மாடுகளின் உரிமையாளர் மீது ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டும் , சென்னை மாநகர கால் நடை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும், அரும்பாக்கம் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக’’ சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments