Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ஐடி ரெய்டு!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:13 IST)
திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ஐடி ரெய்டு!
 பிரபல திரைப்பட பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் மதுரை அன்புசெழியன்  வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புசெழியன் கோடிக்கணக்கில் திரைப்படங்கள் தயாரிப்பவர்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனின்மதுரை வீடு உள்பட சென்னையில் உள்ள மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் திடீரென சோதனை செய்து வருகின்றனர்
 
மதுரையில் அன்புசெழியனுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாகவும் இந்த சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
சமீபத்தில் வெளியான ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து அன்புசெழியன் பெற்றிருந்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments