Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாமக்கல்லில் உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Advertiesment
நாமக்கல்லில் உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
, சனி, 10 செப்டம்பர் 2022 (22:19 IST)
நாமக்கல் மாவட்டத்தில்  நீச்சல் பழகச் சென்ற போது, உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் , வட்ட நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள அத்திப்பழகனூரில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி வெண்ணியா. இந்த தம்பதியின் மகளான ஜனனியும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் – தமிழ்ச்ச்சேல்வி  தம்பதியின் மகளுமான ரச்சனாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தனர்.

இன்று அவர்கள் இருவரும் பள்ளிக்கு அருகிலுள்ள மான் குட்டையில் நீச்சம் பழகச் சென்றனர், ஆனால் துரதிஷ்டவசமாக  நீரில் மூழ்கி பலியாகினர்.

இரண்டு மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரு மாணவிகள் மரணத்திறு இரு குடும்பத்தினருக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  உயிரிழந்த இரு மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''க்யூட் தேர்வு'' முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்