Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபெம்சைக்ளோபீடியா கண்காட்சி

Advertiesment
ஃபெம்சைக்ளோபீடியா கண்காட்சி
, புதன், 15 மார்ச் 2017 (15:58 IST)
பெண்களின் வரலாறுகளை நினைவு கூறும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், சிவப்பு யானை அறக்கட்டளையுடன் இணைந்து ஃபெம்சைக்ளோபீடியா என்ற பெயரில் கண்காட்சி ஒன்றை நடத்துகிறது.



 

 
மார்ச் மாதம் அமெரிக்காவில் பெண்களின் வரலாறு மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த பெண்களின் வரலாறு மாதத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்க தூதரகம் சென்னையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
 
இந்த கண்காட்சியில் பங்களிப்பு துறை மூலம் இணைந்த அமெரிக்க மற்றும் இந்திய பெண்களின் 30 ஜோடிகள் கொண்ட வரையப்பட்ட உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதை உருவாக்கியவர் சிவப்பு யானை அறைக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் திருமதி கீர்த்தி ஜெயக்குமார்.  
 
இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறும். மேலும், இந்த கண்காட்சி மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - மகளிர் தினத்தன்று கொடூரம்