Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! – அந்தியூரில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 28 மே 2020 (08:44 IST)
ஈரோடு மாவட்டத்தில் பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை அதன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் மகளிர் குழுவிற்கு பணம் செலுத்த சென்றுள்ளார் துளசிமாதனின் மனைவி. இதனால் குழந்தையை கணவரிடம் கொடுத்து பார்த்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்.

அவரது மனைவி குழுவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்திருக்கிறார் துளசிமாதன். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக குழந்தையை அவரிடமிருந்து பறித்துக் கோண்டு காவல் நிலையத்திற்கு ஓடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து துளசிமாதனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவே அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்