Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதி தீவிரப் புயலாகும் ஃபானி புயல் – வடதமிழகத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு !

Webdunia
திங்கள், 29 ஏப்ரல் 2019 (09:00 IST)
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபானி புயல் இன்று முதல் அதி தீவிரப் புயலாக உருமாறுகிறது.

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி  புயல் ஒன்று வர இருப்பதாக சில தினங்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இன்று முதல் ஃபானி புயல் அதி தீவிரப் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர இருப்பதால் வட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் இன்னும் 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகியப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

ஜெயலலிதா தீவிர இந்துத்துவா தலைவர் என்பதை அதிமுக உடன் விவாதிக்க தயார்: அண்ணாமலை

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்...!

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments